tirsdag 24. februar 2015

விரல்களில் மொட்டுக்கள் விட்டுச்சென்ற வாசம்..

மவுனமாக
இருக்க
எவ்வளவு முறை
முடிகிறதோ
அவ்வளவு தடவை
மல்லிகையைக்
கோர்த்து கொண்டே
மாலை கட்டி
முடிக்கிறாள்,,,,

ஒற்றைச்
சரமாலை
எவ்வளவு
நீளமாகிறதோ
அது வரை
மொட்டுக்கள்
கூந்தலோடு
முத்தமிடுகின்றன.....

பூக்களின்
சுவாசம் உள்ளே
செல்லும்போது
அதனுடன்
உள்ளே சென்று
வெளியே வரும்போது
அதனுடன்
நந்தவனமாகி
வெளியே வருகிறாள்..

ஆண்டாள் மாலைக்
கனவுகள்
கல்யாண மாலையாகி
வருவதற்க்கு முன்
ஒரு கணம்
சுவாசத்தில்
இடைவெளி வரும்....

புத்துணர்வு தரக்கூடிய
வேறுபட்ட
குணத்தில் இருக்கும்
நேரம் வரை
சின்னப் புன்சிரிப்பு
தொடர
இந்தக்  கவனித்தல்
புறாக்களால்
தொடரப்படுகிறது...

கனவு
மாலைகள்
கை மாறிய பின்
வாடாத
மல்லிகையின்  மனதில்
எங்கோ ஆழத்தில்
இடைவெளிகளை
நிரப்ப
இரவு முழுவதையும்
தியானமாக்கி விடுகிறது
விரல்களில்
மொட்டுக்கள்
விட்டுச் சென்ற
வாசம்.

நாவுக் அரசன்
ஒஸ்லோ 16.02.15

Ingen kommentarer:

Legg inn en kommentar