tirsdag 24. februar 2015

பூவரசம் பூக்கள்....

குதூகலமான
பூவரச
மரங்களின்  
குற்றம்
குறை இல்லாத
இந்த
மஞ்சள் நிறச்
சேலையை
மங்கலத்தில்
சேர்பதில்லை...

அதனால்தானோ
மன்னவனின்
நினைவோடு
தலையத்
தொங்கப்போட்டு
பருவம்
எல்லாம்
விணாகிப் போகிற
தெருவோரத்
தேவதை....

நகரங்களின்
அவசரத்தைப்
புறக்கணித்து விட்டு
நாடுப்புறத்தில்
ஏழைக் குடித்தனம்
போன
தாவணிப் பெண்ணின்
தவிப்புகள்
இதயவடிவில்  உள்ள
இலைகளோடு
மட்டுமே....

வீதிகளிலும்
வேலிகளிலும்
குளத்தம் கரையிலும்
பூ அரசுகளின் கீழே
அமைதியாக
அசைபோடும்
மாடுகளுக்கு
இந்த வீணையின்
ராக சுரம்
நாதஸ்வரம் வாசிக்கலாம்..

பூத்திருக்கும்
காலத்தை விடக்
காத்திருக்கும்
கனவுகளோடு
வாழப்பழகி விட்டது
கண் அசைவில்
ஜீவ நதியை
மஞ்சள் வானத்துக்கு
சமாந்தரமாக
வானவில்லாக
வளைக்கும்
பூவரசம்
பூக்கள்.

நாவுக் அரசன்
ஒஸ்லோ 15.02.15

Ingen kommentarer:

Legg inn en kommentar