tirsdag 24. februar 2015

மீண்டும்
















மார்போடு
வெள்ளை இதழ்கள்
விழுந்த குடை
மரங்கள்

இரவோடிரவாக 
நிறங்களை 
இழந்தன..
பெருத்து
மீண்டும் மீண்டும்
நிரப்பிக் கொண்டு
வழிந்த தடங்களில்
தெருக்களின்
பெயர்கள்
அழிந்தன....

விசையறு
இரவு முழுவதும்
பயங்காட்டியபடி
நட்சத்திரங்கள்
மறையத் தொடங்க
பறவைகள்
திசைகளை
மறந்தன ..

கோலங்களில்
விடுதலையாகி
நிற்கின்ற
சொங்க்ஸ் வான்
பனிச்சறுக்கு வழியின்
உறைந்துப் போயிருந்த
பாளங்களில்
மீண்டும் பாதங்கள்...

குளிர்காலம் மீதான
என் கோபத்தையும்
வழியின்றி அகப்பட்ட
வருத்தத்தையும்
துவைத்துப் போட்டு
நினைவுகள்
பேசுகிற நேரங்களில்
சறுக்கி விழுந்த
ஞாபகம்
தவிர்க்க இயலாவிட்டாலும்
மீண்டும்
உந்தி எழுந்ததை
மறக்கவே முடியவில்லை.


நாவுக் அரசன்
ஒஸ்லோ 24.02.15


இந்தப் படம் சில நாட்கள்முன் என்னோட மொபைல் போன் கமராவில் சொங்க்வான் ஏரிக்கரை போன போது எடுத்தேன். நினைவுகள் ஒட்டிக்கொண்டது..

Ingen kommentarer:

Legg inn en kommentar