tirsdag 24. februar 2015

அனுபவம் வயதாகிய காலத்தில்..

அறியாமை
கடவுளின்
அகராதியில்
ஆனந்தமாக
குழந்தைகள்
அதைக்
கண்டுபிடித்து
விடுகிறார்கள்..

அனுபவம்
வயதாகிய
காலத்தில்
நாங்கள்
தடுமாறும்  நிலையில்
ஆன்மிகத்தின்
முதல்
அனுபவம்
இப்பவும்
அவர்களிடம் தான்
இருக்கிறது ....

புத்தகங்களில்
நாங்கள்
மரமாக நின்று
அறிவைத் தேடுகிறோம்
அவர்களோ
அதில்
விதையாகி
வாழ்க்கையாகவே
தொலைந்து
போகிறார்கள் ...

அவர்கள்
திறக்கும்போது
மடங்கிப் போன
புத்தகங்கள்
விழித்துக் கொள்கின்றன
மூடும் போது
சலித்துக் கொண்டே
ஒடுங்கிப்
போகின்றன....

அறிவு என்பது
ஆரம்பம் தான்
என நினைத்து
இறுக்கமான
எல்லாம் தெரிந்த
போலி முகத்தை
கழட்டி வைத்துப்போட்டு
குழந்தைகளுடன்
தர்கித்துப் பாருங்கள்
அதுதான்
நாங்கள்
மீண்டும்
குழந்தை ஆவதற்கு
ஒரே வழி.

நாவுக் அரசன்
ஒஸ்லோ 20.02.15

Ingen kommentarer:

Legg inn en kommentar